ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் பாரமி வசந்தி சாதனை


5f01511cafdc33ab46e8bb5934f13850_L

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்க பதக்கத்தை வென்ற குளியாப்பிட்டிய மத்திய வித்தியாலத்தை சேர்ந்த பாரமி வசந்தி இன்று புதிய கனிஷ்ட இலங்கை மெய்வல்லுனர் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.

பின்லாந்தில் இன்று ஆரம்பமான 17வது சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் 3000 மீட்டர் மகளீருக்கான தடைகள ஓட்டப்போட்டியில் இந்த சாதனையை இவர் நிலைநாட்டியுள்ளார்.

இந்த முதற்சுற்று போட்டியில் இவர் 5வது இடத்திற்கு தெரிவானார். 10 நிமிடங்கள் 20.12 வினாடிகளில் இந்த தூரத்தை ஓடி முடித்தார்.

பின்லாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் 158 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 1500 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>