தொடரும் டின்மீன் இறக்குமதி சர்ச்சைக்கு முடிவு – ரிஷாட் பதியுதீன்


Rishad B

டின்களில் அடைக்கப்பட்ட மீன் விவகாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்ததனால் சீனாவில் இருந்து மீன்கள் விநியோகம் செய்யும் பிரதிநிதி குழுவை நாங்கள் இலங்கைக்கு அண்மையில் வரவழைக்க விரும்புகின்றோம்’ என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் அமைச்சில் டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதேஅமைச்சர் இதனை தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளரான ரன்சியோங் மற்றும் சீன தூதரகம், சுங்கத் திணைக்களம்,; இறக்குமதியாளர்கள் இலங்கை நியமங்கள் நிறுவனம்மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் அனைத்துப் பங்குதாரர்களும் இச்சந்திப்பில் இணைந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‘நாளாந்த வாழ்க்கை செலவினத்தை நிர்வகிப்பதில் ஒரு முக்கியமான அம்சமாக விளங்கும் டின்களில் அடைக்கப்பட்ட மீன்கள் உள்ளூர் நுகர்வோரால் பாரியளவில் பயன்படுத்தப்படுகின்றது. 60 இலங்கை நிறுவனங்கள் வருடத்திற்கு 40 மில்லியன் கிலோவினை உள்ளூர் சந்தைக்கு இறக்குமதி செய்கின்றன.

சீனாவில் இருந்து டின்களில் அடைக்கப்பட்ட மீன் விநியோகத்தினை 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இலங்கை பெற்றுக் கொள்ளவில்லை. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட டின்களில் அடைக்கப்பட்ட மீன்களில் புழுக்கள் இலங்கை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டதோடு; சுங்கத்தினால் இறக்குமதிகள் தடுத்துவைக்கப்பட்டதாக செய்தி ஊடகங்களில் பரவலாக பதிவாகியது.

சில டின்கள் மறு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன் விளைவாக, பெப்ரவரி மாதம் முதல் உள்ளூர் துறைமுகங்களில் உள்ளூர் சந்தைகளுக்கு என இறக்கப்பட்ட டின் மீன்களில் சில சிதைந்த மற்றும் தகுதியற்றது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. சீன விநியோகஸ்தர்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 31 சரக்குகளில் 3 ஒட்டுண்ணி பரவி இருந்ததையடுத்து உள்ளூர் சந்தைகளுக்கு இவை விடுவிப்பது தகுதியற்றது என இலங்கை நியமங்கள் நிறுவனமும் மற்றும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு திணைக்களமும் இணைந்து தீர்மானித்தன.

சைபர் முதல் மூன்று வரையிலான இடைவெளி ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஆனால் இந்த சரக்குப் பொருட்கள் அதிக அளவு ஒட்டுண்ணிகள் இருந்தன.

92 கொள்கலன்களில் சீன விநியோகஸ்தர்களிடமிருந்து டின்களில் அடைக்கப்பட்ட மீன்கள், இந்த ஆண்டு தொடக்கத்தில் வந்து சேர்ந்தது அத்துடன் 80 கொள்கலன்கள் சான்றிதழ் வழிமுறைகளை அடிப்படையாக இலங்கை அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டது.

எங்கள் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாக செய்துள்ளனர் இருப்பினும், டின்களில்அடைக்கப்பட்ட மீன் இறக்குமதியின் முழுமையான நிறுத்தம் எங்கள் நுகர்வோரைப் பாதிக்கும் அதேவேளை சந்தையில் பற்றாக்குறையும் ஏற்படலாம். சீன அரசாங்கத்தின் ஆதரவை நாங்கள் கோர விரும்புகிறோம். சிநேக பூர்வமான கலந்துரையாடல்கள் மூலம் இந்த சூழ்நிலையைத் தீர்ப்பதற்குத் சீன அதிகாரிகள் எங்களை ஆதரிப்பார்கள் என்பதில் உறுதியாக உள்ளோம்.

இந்த பிரச்சினையை எதிர்கொண்ட தங்களுடைய சொந்த ஏற்றுமதியாளர்கள் எமது சுகாதாரத் தரங்களை கருத்திற்கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையை இணக்கமான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சீன அரசாங்கத்தின் ஆதரவை நாங்கள் அழைக்க விரும்புகிறோம்.

சீன சுகாதார அதிகாரிகள் இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ள எங்களதுசுகாதாரத் தரத்தை பூர்த்தி செய்ய எங்களுக்கு உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கை நியமங்கள் நிறுவனத்தின் தரத்திற்கு இணங்க எங்கள் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்க அதிகாரிகளாகிய நாங்கள் ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம்.

இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்குச் சீனாவிலிருந்து இலங்கைக்கு டின்களில் அடைக்கப்பட்டமீன் விநியோகம் செய்யும் சீன பிரதிநிதிகளை நாங்கள் அழைக்கிறோம். அதன் பின்னர் இறுதி முடிவிற்கான சந்திப்பிற்கு இலங்கை இறக்குமதி பிரதிநிதிகளை பீஜிங்கிற்குஅனுப்புவோம்’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>