முஜிபுர் ரஹ்மான் எம்.பியின் பெயரில் மோசடி, ஒருவர் கைது


Mujeebur rahman

கொழும்பில் சொகுசு வீடு பெற்றுத் தருவதாக தெரிவித்து கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் பெயரை பயன்படுத்தி கோடிக் கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படும் நபர் ஒருவர் வாழைத்தோட்ட பொலிஸாரினால் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வழங்கிய முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் புதுக்கடை பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் ஒருவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இவர் வாழைத்தோட்ட பிரதேசத்திலுள்ளவர்களிடம் மாத்திரம் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   (மு)

One comment

  1. இவருக்கு பங்கு போயிருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>