தேசியப் பட்டியலில் வருபவர்களுக்கு தேர்தல் முறைமையின் பிரச்சினை புரியாது- ரவுப் ஹக்கீம்


rauff hakeem

தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்துக்கு வந்தவர்களுக்கு தேர்தல் முறைமையினால் கட்சிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை புதிய முறையில் நடைமுறைப்படுத்தியதனால் முகம்கொடுத்த பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படாத நிலை உள்ளது. இது போதாமைக்கு மாகாண சபைத் தேர்தலையும் புதிய முறைமையில் நடாத்த சம்பந்தப்பட்ட அமைச்சர் விடாப் பிடியாக நிற்கின்றார்.

தற்பொழுது மாகாண சபைத் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலை இழுத்தடிப்பதற்கு காரணமாக புதிய தேர்தல் முறைமையைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் நாம் அரசாங்கத்துக்கு கூறிக் கொள்கின்றோம் எனவும் அமைச்சர் கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.   (மு)

9 comments

  1. அப்போ அன்று கையை உயர்த்தும்போது நீங்களும் புதிய தேர்தல் முறைமைப் பற்றி தெரியாமல் தான் இருந்ததோ???
    அப்போ நீங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றும் கூட உங்களுக்கு அதன் விளக்கம் தெரியாமல் தானே இருந்துள்ளது!!!
    அதனால்தானே கையை உயர்த்தி ஆதரவு வழங்கியது!!!
    அல்லது ஏதாவது பிரதியமைச்சு ஒப்பந்தமோ???

  2. அப்போ… எதுக்கய்யா , உம்மை சாணக்கிய தலைவன் எண்டு, ஒரு சில சொம்பு தூக்கிகள் தலையில வெச்சிட்டு ஆடுர…?

  3. Well said local election failure they found after election finished only the same this provincial also will happened.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>