பந்து வீச்சில் இரண்டாம் முரளியாக விளங்கும் ஹேரத் ஓய்வு பெற முஸ்தீபு


rangana

இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் அறிவித்துள்ளார்.

40 வயதுடைய ரங்கன ஹேரத் இடது கையினால் சுழல் பந்து வீசும் ஒரு வீரர். இலங்கை அணியில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக பிரகாசித்த ஒரு வீரர் இவராவார்.

இவர் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பந்துவீச்சில் 418 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இவர் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 33 டெஸ்ட்களில் 5 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியுள்ளார். 9 போட்டிகளில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இவர் 71 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணி பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், சிறந்த வீரர்கள் அணியிலிருந்து விடைபெறுவது அணிக்கு பாரிய இழப்பாகும் என்பது யாரும் அறிந்த உண்மையாகும்.   (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>