‘சிறந்த மஸ்ஜித்’ விருது வழங்கும் தேசிய விழா – 2018 (VIDEO)


qasdc

சமுக மேம்பாடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் முன்நின்று செயற்பட்டு தமது திறமைகளைக் காட்டிய பள்ளிவாசல்களுக்கு பணப் பரிசில்களும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை மற்றும் நல்லிணக்க பேரவையும் (ஏ.ஆர்.சி) முஸ்லிம் சமய விவகார அமைச்சும் இணைந்து நேற்றுமுன்தினம் (14) தேசிய மஸ்ஜித் விருது விழாவை நடாத்தியது.

170 விண்ணப்பங்களிலிருந்து இந்நிகழ்வில் விருதுகள் பெற்ற பள்ளிவாயல்களின் விபரம் வருமாறு,

சகவாழ்வு தொடர்பாக
01.  1 வது இடத்தை அரநாயக்க, வில்பொல அல்-மனார் மஸ்ஜித்(இரண்டு இலட்சம் பணப்பரிசு)

02. 2 வது இடத்தை நிகவரெட்டிய அபுக்காகம முன்னேக்குளம் அபுக்காகம ஜூம்ஆ மஸ்ஜித் (ஒரு இலட்சம் பணப்பரிசு)

03. 3 வது இடத்தை இரண்டு பள்ளிகள் பெற்றுள்ளன- கொழும்பு வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசலும், கொழும்பு பொறலை ஜூம்ஆ மஸ்ஜிதும் பெற்றுக் கொண்டன.

04. 4 வது இடத்தை புத்தளம் பத்துளுஓயா புதுக்குடியிருப்பு முஹிடீன் ஜூம்ஆப்பள்ளிவாசல் பெற்றுக் கொண்டது.

இந்தத் தொகுதிக்குள் வெற்றியாளராக கண்டி, மடவல பஸார் ஜாமிஉல் ஹைராத் ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது. (மூன்று இலட்சம் பணப்பரிசு)

சமூக சேவை தொடர்பாக
01. 1 வது இடத்தை கண்டி மடவல பஸார் ஜாமிஉல் ஹைராத் ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

02. 2 வது இடத்தை அநுராதபுரம் ஜாமியா கதீஜா ஜூம்அப் மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

03. 3 வது இடத்தை இடத்தை அறநாயக்க, வில்பொல அல்-மனார் மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

04. 4 வது இடத்தை காலி மொரகொட அத்தக்வா ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

இந்தத் தொகுதிக்குள் வெற்றியாளராக (வின்னர்) கொழும்பு வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசல் பெற்றுக் கொண்டது.

கல்வி தொடர்பாக
இதில் முதலாம் இடத்தை 2 மஸ்ஜிதுகள் பெற்றுள்ளன.

01.  1 ஆம் இடம் – மட்டக்களப்பு, ஓட்டமாவடி மீராவோடை-4, மீரா ஜூம்ஆ மஸ்ஜித்

02.  1 ஆம் இடம் – அறநாயக்க, வில்பொல அல்-மனார் மஸ்ஜித் என்பன பெற்றுக் கொண்டன.

03.  2 ஆம் இடத்தை கொழும்பு, கொஹிவத்த அல்-இப்ராஹிமியா ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

04.  3 ஆம் இடத்தை  கண்டி மடவல பஸார் ஜாமிஉல் ஹைராத் ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

05.  4 ஆம் இடத்தை மாவனல்ல. ஹிங்குல மஸ்ஜிதுல் ரஹ்மான் ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

இந்தத் தொகுதிக்குள் வெற்றியாளராக (வின்னர்) கொழும்பு வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசல் பெற்றுக் கொண்டது.

வாழ்வாதாரம் தொடர்பாக
01. 1 வது இடத்தை கண்டி, பேராதெனிய வீதி, கடுலே மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

02. 2 வது வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசல் பெற்றுக் கொண்டது.

03. 3 வது இடத்தை கண்டி மடவல பஸார் ஜாமிஉல் ஹைராத் ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

04. 4 வது இடத்தை பொறலை ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

இந்தத் தொகுதிக்குள் வெற்றியாளராக (வின்னர்) பலாங்கொட கொரக்கஹமட முஹியதீன் பெரிய ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டனர்.

டொப்டென் தெரிவில் வெற்றி பெற்ற மஸ்ஜிதுகள்.
01. 1 வது இடத்தை கண்டி மடவல பஸார் ஜாமிஉல் ஹைராத்  ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

02. 2 வது இடத்தை கண்டி, பேராதெனிய வீதி, கடுலே மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

03. 3 வது இடத்தை மாவனல்ல. ஹிங்குல மஸ்ஜிதுல் ரஹ்மான் ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

04. 4 வது இடத்தை ஹட்டன் ஸ்டேஷன் வீதி, ஹட்டன் ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

05. 5 வது இடத்தை கொழும்பு, கொஹிவத்த அல்-இப்ராஹிமியா ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

06. 6 வது இடத்தை நிகவரெட்டிய அபுக்காகம முன்னேக்குளம் அபுக்காகம ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

07. 7 வது இடத்தை கண்டி, மடிகே, உடதலவின்ன , மஸ்ஜிதுல் ஹிக்மா ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

08. 8 வது இடத்தை அறநாயக்க, வில்பொல அல்-மனார் மஸ்ஜித் என்பன பெற்றுக் கொண்டன.

09. 9 வது இடத்தை அநுராதபுரம், ஜம்மியா கதீஜா ஜூம்ஆ மஸ்ஜித் பெற்றுக் கொண்டது.

இந்தத் தொகுதிக்குள் வெற்றியாளராக (வின்னர்) கொழும்பு-12, வாழைத்தோட்டம், அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசல் பெற்றுக் கொண்டது.

இந்நிகழ்வில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம், அமைச்சர்களான மனோ கணேசன், றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதி அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரைக்கார், ரவி கருணாநயக்க அமைச்சின் செயலாளர் மீகஸ்முல்ல, திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஷ்வி முப்தி, பேராசிரியர் தம்பர அமில தேரர் மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விருது வழங்கள் விழாவில் சகல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டு வருவதை கருத்திற் கொண்டு கொழும்பு-12, வாழைத்தோட்டம், அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு 5விருதுகள் வழங்கப்பட்டு அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த தெரிவுகளை மேற்கொண்டு விருதுகளுக்கு மஸ்ஜிதுகளை தெரிவு செய்த தெரிவுக் குழுவினர் 9 பேருக்கும், 5 பௌத்த மதகுருமாருக்கும் அதிதிகளால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (மு)

qasdc sfaa yhn 4efvv

7 comments

  1. அல்லாஹ்வின் இல்லத்துக்கும் பரிசா?? பள்ளியையும் அரசியலில் புகுத்த வழி தேடுரான்க!!

  2. அல்லாஹ்வின் இல்லத்துக்கும் பரிசா?? பள்ளியையும் அரசியலில் புகுத்த வழி தேடுரான்க!!

  3. ஜம்மியா மார்க்கத்தை தவிர மற்றவைகளை நன்றாக செய்வார்கள்
    ஹஜ்ஜு பிறைக்கு முன் தங்களை கலால்படுத்த ஆடும் நாடகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>