புகையிரதத்தில் வர்த்தகத்தில் மற்றும் யாசகத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது


arrest

புகையிரதத்தில் அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபட்டமை மற்றும் யாசகம் கோரியமைக்காக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பிரதேசங்களில் ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றங்களில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

புகையிரதத்தில் வர்த்தகத்தில் ஈடுபடல், யாசகம் கேட்டல் போன்ற செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இக்குற்றங்களைப் புரிந்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான சகல முறைப்பாடுகளையும் 011 23 36 614 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக முன்வைக்க முடியும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. (நு)

– ஐ. ஏ. காதிர் கான் –

One comment

  1. My3 gvermant lost manidergal eppadi vaalvargal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>