அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில் இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி


17JULDOC

மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வை தொடர்பில் அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் வரலாற்றுமிக்க ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில் இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி ஈட்டியுள்ளது. இலங்கைக்கு சாதகமான இந்த தீர்ப்பை பெற்றுக்கொள்வதற்காக தமது கடமைகளை நேர்த்தியாக செய்த இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்கள். என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

திண்ம வீதி டயர் (OTR) ஏற்றுமதிக்கான மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வைக்கான சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பின் முடிவு எமது உற்பத்திக்கான ஏற்றுமதிகள், குறிப்பாக இரப்பர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான எங்கள் அமைச்சின் முயற்சிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். இது அமெரிக்காவுடன் எமது வர்த்தகத்தை வலுப்படுத்த உதவுகிறது. விரைவில் அமெரிக்காவிற்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதியினை ஈட்டிக்கொள்வதற்கும் உதவுகிறது. இலங்கையின் உற்பத்திகளை பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்க மக்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்ப்பிற்கான சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பின் முடிவு தொடர்பில் இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சொனலி விஜேரத்ன மற்றும் அவரது அதிகாரிகள் அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து இங்கு கருத்து தெரிவிக்கையில், 2018 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி இலங்கையில் இருந்து திண்ம வீதி டயர்களை இறக்குமதி செய்வதற்கான உத்தரவாத விலைக்கு வழங்கப்பட்ட 0.95 சத வீத தீர்வை நீக்கப்பட வேண்டும் என சர்வதேச வர்த்தகத்திற்கான அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் விளைவாக, 0.95% சத வீதம் இலங்கையிலிருந்தும் அமெரிக்கா (OTR) டயர்கள் மற்றும் ரப்பர் டயர்களை இறக்குமதி செய்வதால் பெரியளவில், 2.18% சத வீத தீர்வும் நீக்கப்படுகின்றது.

அமெரிக்காவுக்கான திடமான டயர் ஏற்றுமதியின் வளர்ச்சி போக்கு 2012 ஆம் ஆண்டில் 58.21 மில்லியன் டொலராகவும், 2013 ஆம் ஆண்டில் 56.15 மில்லியன் டொலராகவும், 2014 இல் 50.70, 2015 இல் 53.22 , 2016 இல் 60.38 மில்லியன் டொலராகவும் காணப்பட்டது. கடந்த வருடம் மட்டும் 69.04 மில்லியன் அமெரிக்க டொலராக பாரிய அதிகரிப்பு போக்கை காட்டியது. கடந்த வருடம் அமெரிக்காவிற்கான மொத்த ஏற்றுமதி கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர்களாக இருந்தன, இது 2016 ல் இருந்து 2.8 பில்லியன் டொலரகவும் 2017 ல், 2.9 பில்லியன் டொலராகவும் அதிகரித்தது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மொத்த இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு 12ம% சத வீத அதிகரிப்புடன் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டது. அதேவேளை இது 2016 ஆம் ஆண்டில் 3.3 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.

மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வினை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வர்த்தக திணைக்களம் மற்றும் அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணைக்குழு மீது அமெரிக்க தொழில்துறை தாக்கல் செய்த மனு திண்ம வீதி டயர் தயாரிப்பாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் மானியங்களிலிருந்து வழங்கப்பட்ட நன்மைகள் மற்றும் இறக்குமதி மீதான மானியமானது ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு ரப்பர் தொழில் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க வர்த்தகத் துறையானது இலங்கையில் இருந்து திண்ம டயர்களை இறக்குமதியை செய்வதற்காக மானியம் மீது மிகைப்பொருள் தீர்வு எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டுத் தீர்வை உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. ‘மூலதன மற்றும் இடைநிலை பொருட்கள் மீதான நிதிப் பற்றாக்குறை’ , ‘பாரம்பரிய அல்லாத பொருட்கள் மீது ஏற்றுமதியாளர்களுக்கு வரி சலுகைகள்’ போன்ற மானிய திட்டங்களை அமெரிக்க வர்த்தக திணைக்களம் பயன்படுத்துகிறது. அமெரிக்க வணிகத் துறை கடந்த வருடம் ஜனவரி 4 ஆம் திகதி, இலங்கை அரசாங்கத்தால் சிறியளவில் ரப்பர் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட ரப்பருக்கான உத்தரவாத விலை திட்டத்திற்கான மிகைப்பொருள் தீர்வு எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வை எல்லைகளை கணக்கிடுவதற்கான விசாரணையின் பின்னர், மிகைப்பொருள் தீர்வு எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வையின் இறுதி உறுதிப்பாட்டு அறிவிப்புகளை அறிவித்தது.

இலங்கையில் இருந்து OTR டயர் இறக்குமதி மீது 2.18 சதவீதம் இத் தீர்வை சுமத்தப்பட்டுள்ளது. இந்த வரம்பில் ரப்பர்களுக்கான உத்தரவாத விலை திட்டம் 0.41% ‘மூலதன மற்றும் இடைநிலை பொருட்கள் மீதான நிதிப் பற்றாக்குறை மீதான விதிவிலக்குகளுக்கும் 0.95% தீர்வை சிறியளவில் ரப்பர் வைத்திருப்பவர்களுக்கு மற்றும் 0.82% தீர்வை பாரம்பரியமல்லாத பொருட்கள் ஏற்றுமதிக்கும் வழங்கப்பட்டது என்றார் அமைச்சர்.

சமீபத்திய வெற்றி அமெரிக்க – இலங்கை வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதாக காணப்படுகின்றது என இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சொனலி விஜேரத்ன ஒப்புக்கொண்டுள்ளார். இது நன்கு பிரசித்தமான ரப்பர் உற்பத்திக்கான ஏற்றுமதிக்கான தீர்வைகள் எதிரீடு செய்ய உதவுவதற்கான இலங்கையின் முதல் சர்வதேச வெற்றியாகும் எனவும் சொனலி சுட்டிக்காட்டினார். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>