புதிய யூரோ 4 எண்ணெய்யால் ஜப்பான் வாகன இறக்குமதியில் சிக்கல் !


P1000107-1024x768 copy

ஜப்பானில் இருந்து கொள்வனவு செய்யப்படும் வாகன இறக்குமதியை நிறுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சினால் யூரோ 4 என்ற புதிய ரக எரிபொருள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யூரோ 4 என்ற எரிபொருள் ரகத்திற்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட புதிய சட்டத்திற்கு அமைய ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் தோன்றியுள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரேன்ஜி தெரிவித்துள்ளார்.

யூரோ 4 எண்ணெய் பயன்படுத்தும் போது, மேலதிகமாக மற்றுமொரு கெமிக்கல் (Chemical) ஒன்றைப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பானிய வாகனங்களை இறக்குமதியில் சிக்கலை தோற்றுவித்துள்ளதாகக் குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>