சர்வதேச சந்தை வாய்ப்பை இலக்கு வைத்து இணைய முனையம் திறப்பு


fksz

இலங்கையின் வர்த்தகத் திணைக்களம், உலக வங்கியின் துணையுடன் SLTIP என்றழைக்கப்படும் இலங்கை வர்த்தக தகவல் நுழைவாயில் தளம் இன்று கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் புத்திக பதிரன வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தேசிய வத்தக வசதிகள் குழுவின் சமதலைவியுமான திருமதி சோனாலி விஜேரத்ன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் திரு. KDN ரஞ்சித் அசோகா, உலக வங்கி குழுவின் சிரேஷ்ட வர்த்தக நிபுணர், மார்கஸ் பார்ட்லி ஜோன்ஸ், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்குமான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் HE பிரைஸ் ஹட்ஷெஸன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தத் தளத்தின் மூலம் வர்த்தகர்களுக்குத் தேவையான தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பண்டங்கள், அனுமதிப்பத்திரங்கள், தீர்வைகள், சட்ட திட்டங்கள் முதலான தகவல்கள் வழங்கப்படும்.

இது உலக வர்த்தக ஸ்தாபனத்தின் வர்த்தக வசதியளிப்பு உடன்படிக்கை முதலான சர்வதேச ஒப்பந்தங்களுக்கு முக்கியமானதாகத் திகழ்கிறது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>