ஆரோக்கியமான வாழ்வு – இலவச கருத்தரங்கு தெஹிவளையில்


58d5584214c2354204726fbc9c2a02c8-6-5

பொது மக்களின் நன்மைக்காக பம்பலப்பிட்டி அமேசான் உயர் கல்வி நிறுவனத்தினால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய இலவச கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களின் ஆரோக்கியமான வாழ்வை வலுவூட்டும் நோக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27.07.2018 ) பி.ப. 03.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரை இந்த இலவசக் கருத்தரங்கு தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் உள்நாட்டு, வெளிநாட்டு சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

உடல் மற்றும் உள நோய்கள், உடல்பருமனை குறைத்தலுக்கான நுட்பங்கள், தொற்றா நோய்கள், சிறுவர்களின் கற்றல் மற்றும் உளவியல் பிரச்சனைகள் உள்ளிட்ட எல்லா வித நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகளும் இதன்போது இலவசமாக வழங்கப்படும். (நு)

மேலதிக விபரங்களுக்கு – 0777341498

– எம்.என்.எம்.அப்ராஸ் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>