WhatsApp அறிமுகப்படுத்தும் புதிய சேவை : “WhatsApp Payment”


Screen Shot 2018-07-30 at 11.47.46 AM

பயனாளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்திவரும் WhatsApp நிறுவனம் தற்பொழுது பணபரிமாற்ற முறை ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

இதன் முதல் கட்டமாக WhatsApp நிறுவனம், இந்தியாவில் குறித்த சேவையை அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசின் அனுமதியைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை மிகவும் எளிய முறையில், மற்றொருவருக்கு அனுப்பும் வகையில், WhatsApp Payment சேவை உதவும் எனத் தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூபெர்க், இது தொடர்பில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் இந்தியாவில் இதற்கான எப்ளிகேஷனை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும், மக்களுக்கு எளிதான சேவையை வழங்குவதே, இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல்களையும், குறுஞ்செய்திகளையும் மட்டும் பரிமாற உதவியாக இருந்த WhatsApp மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்ற செய்தி வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளைக் குறித்த சேவையை இன்னும் சில மாதங்களில் இலங்கையிலும் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>