
இறக்குமதி செய்யப்படும் 1000CC க்கு குறைந்த வாகனங்களின் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்து, குறித்த வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று முதல் இந்த வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக, நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 1000CC க்கு குறைந்த சாதாரண வாகனம் ஒன்றிற்கான வரி ஒரு லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 1000CC க்கு குறைந்த ஹைபிரிட் வாகனங்களின் வரி 4 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (ஸ)