கல்வியால் முழுமையடைந்த சமூகமாக நாம் மாறவேண்டும் – காதர் மஸ்தான்


38127505_823039387899383_8995522033232117760_n

தற்காலத்தில் அரசாங்கம் கல்வித்தகமைகளின் அடிப்படையில் அரச நியமனங்கள் வழங்கப்படுவதால் இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் உரிய தகமைகளுடன் சேவையாற்ற நாம் அனைவரும் கல்வியால் முழுமையடைந்த சமூகமாக மாறவேண்டும் என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களது “புத்தெழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்டம் 2016-2020 “எனும் செயற்றிட்டத்தின் கீழ் இன்று நுக கஹ்தமன முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய வகுப்பறை இருமாடிக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் மஸ்தான் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் மக்களுக்கான உதவிகளாக இருக்கட்டும் அல்லது அரச நியமனங்கள் வழங்குவதாக இருக்கட்டும் அதில் பக்கச்சார்பு அல்லது தமது கட்சி,ஆதரவாளர்கள் அடிப்படையில் வழங்கப்பட்டது. அதனால் பலவேறான தேவைகளை உடைய அல்லது தகமைகளை உடையவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் உங்களது மாவட்டத்திலிருந்து இந்த நாட்டுக்குத் தலைவனாக அனுப்பப்பட்ட நமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையிலான நல்லாட்சியில் தகைமைகளின் அடிப்படையில் நியமனங்களையும் தேவைகளின் அடிப்படையிலும் முன்னுரிமையின் அடிப்படையிலும் மக்களுக்கான சேவைகள் இடம்பெறுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனவே நம்மிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புக்களை நம்மால் நிர்வகிக்கக்கூடிய தகைமையை கொண்ட கல்வியால் முழுமையடைந்த சமூகமாக நாம் இருக்க வேண்டும்.

பலர் சமூக மாற்றத்தை வன்முறைகள் மூலம் கொண்டுவரலாம் என முனைகின்றனர் அது தவறானதாகும்
நிரந்தர சமூக மாற்றத்தை கல்வியின் மூலம் மாத்திரமே உருவாக்க முடியும்.

நாட்டில் ஏற்படும் பல்வேறான வன்முறைகளுக்குக் கல்வியில் பூரணமடையாத அல்லது சகவாழ்வை விரும்பாத இனவாத சிந்தனைகளைக்கொண்டவர்களாலேயே உருவாக்கம் பெறுகின்றது எனவே உங்களது
பாடசாலைக்காலகாலத்திலேயே சகவாழ்வுடன் வாழப் பழகிக்கொள்வதுடன் இந்தச் சமூகம் என்பது நமக்கானது, நான் இந்தச் சமூகத்துக்கு பயனுள்ள ஒருவராக வருவேன் என்ற நோக்குடன் படியுங்கள்,

அதிமேதகு ஜனாதிபதி உங்களுக்கு விசேடமாக வழங்கியுள்ள இந்த பாடசாலைக் கட்டிடம், சொத்துக்கள் என்னுடையது என்ற நோக்குடன் பாவித்து நமது அடுத்த சந்ததிக்கும் இவ்வாறே கொடுத்து உதவ வேண்டும்.
எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புத்தெழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்டம் என்னும் செயற்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குறித்த
பாடசாலைக்கட்டிடத்தை மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் அவர்களது பங்கேற்புடன் வடமாகாண ஆளுநர் கெளரவ ரெஜினோல்ட் கூரே அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், அரச உயரதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ச)

38127505_823039387899383_8995522033232117760_n

 

38199963_823039567899365_4065992964428529664_n

38180733_823039637899358_1658397030306807808_n

 

38124953_823040114565977_6990568412548169728_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>