சிறந்த சூழலியல் பத்திரிகையாளருக்கான விருது ஊடகவியலாளர் ஆதில் அலி சப்ரிக்கு


aadhil ali shabry awarded

ஆண்டின் சிறந்த சூழலியல் பத்திரிகையாளருக்கான விருது நவமணி பத்திரிகையின் ஊடகவியலாளர் ஆதில் அலி சப்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸை மௌன்ட் லாவ்னியா ஹோட்டலில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்விலேயே இவ்விருது வழங்கப்பட்டது.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியன இணைந்து தொடர்ந்தும் 19ஆவது வருடமாக மேற்படி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

சுற்றாடல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி, சூழலைப் பாதுகாப்பதற்காகவும், சுற்றாடல் பாதிப்பை மக்களுக்கு எடுத்துக்கூறி வருடம் முழுவதும் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் தாக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் தகவல் வெளிப்படுத்திய பத்திரிகையாளர்களுக்கே இவ்விருது வழங்கப்படுகின்றது.

திப்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயம், மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரும், மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆதில் அலி சப்ரி வில்பொல அரனாயக்கவைச் சேர்ந்த ஆசிரியர்களான முஹம்மத் அலி சப்ரி மற்றும் சித்தி மர்சூனா தம்பதிகளின் புதல்வராவார்.

அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது, போரத்தின் செயற்குழு உறுப்பினராக இவர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நு)
aadhil ali shabry

aadhil ali shabry awarded

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>