அமைச்சர்களது சம்பளத்தில் 5 சதத்தையேனும் கூட்ட விட மாட்டேன்- ஜனாதிபதி


maithripala sirisena

பாராளுமன்றத்திலுள்ள எம்.பிக்கள் எவருடையவும் சம்பளத்தில் ஐந்து சதத்தை கூட அதிகரிக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் எந்தத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுத்தாலும்,  இறுதியாக அது அமைச்சரவையில் வந்ததன் பின்னரேயே அமுலுக்கு வரவேண்டும். அதற்கு நான் அமைச்சரவையில் இடமளிக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி பொலன்னறுவையில் இன்று (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் கூறினார்.

நேற்றைய தினம் பத்திரிகையில் பெயர் குறிப்பிடப்படாத நிலையில் எம்.பி.க்களதும் அமைச்சர்களதும் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான செய்தி வெளியாகியிருந்தது. இன்றைய பத்திரிகையில் பெயர்களுடன் அச்செய்தி வெளியாகியிருந்தது. எந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் யார் கூறினாலும், சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள இடமளிக்கவே மாட்டேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.   (மு)

 

 

3 comments

  1. பார்ப்போம் இதிலாவது ஜனாதிபதி சொல்வது வெல்லுமாவென்று,.

  2. யாருக்கும்.சம்பளம்.கூட்டினால்.அரசாங்கத்தை.உடனே.களையுங்கள்.ஏழைமக்களின்பணத்தில்.சுகுசுவாழ்க்கை.வாழவிடாதீர்கள்.அந்ததபணத்தை.பாடசாலைகள்.வைத்தியசாலைகள்.அமைத்த்துக்கொடுங்கள்.அமைச்சர்மார்கள்.பாராலுமன்ற.உறுப்பினர்களுக்கு.சம்பபொளம்போதட்டி.பாச்சைஎடுக்கச்சொல்லுங்கள்..மமக்கள்கொடுப்பாங்க

  3. இவர் இப்படி சொன்னாதால் நிச்சயம் கூட்டுவார்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பல வருடங்களாக வேலை செய்து நாட்டிற்கு பெருந்தொகை அந்நிய செலவானியை கொண்டு வருபவார்களுக்கு எப்போது ஓய்வூதியம் தருவீர்கள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>