3 ஆவது போட்டியிலும் தென்னாபிரிக்காவுக்கே வெற்றி


images (1)

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது ஒரு நாள் போட்டியை தென்னாபிரிக்க அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 363 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 364 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டி நேற்று (05) கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.   (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>