முதலிடம் பெற்றார் விராட் கோஹ்லி


18INNSMVIRATPTI1232017000008A

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதன்மூலம், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் முதலிடத்துக்கு முன்னேறிய 7ஆவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய விராட் கோஹ்லி, குறித்த தரப்படுத்தலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் கோஹ்லி முதலிடத்துக்கு முன்னேறிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 51 ஓட்டங்களையும் பெற்றதையடுத்து, ஒட்டுமொத்தமாக 934 புள்ளிகளை ஈட்டியுள்ளார்.

இதற்கு முன்னர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டிவன் ஸ்மித் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)
scr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>