அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மீனவக்குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்


38612300_2241517189197797_3947734987008114688_n

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட 534 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (06) மன்னார், காட்டாஸ்பத்திரி மைதானத்தில் இடம்பெற்றது.

மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், முசலிப் பிரதேச சபை தவிசாளர் சுபியான், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி அன்ஸில் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பேசாலை வடக்கு – மேற்கு, முருகன் கேவில், காட்டாஸ்பத்திரி, வசந்தபுரம், தலைமன்னார் கிராமம், தலைமன்னார் பியர், சிறுதோப்பு, தோட்டவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவக் குடும்பங்களுக்கு இந்த வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(அ)
38655864_2241517339197782_5686184469636055040_n

38633662_2241518129197703_8472231618843508736_n

38680504_2241517062531143_7812431909539020800_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>