கலைஞர் கருணாநிதி காலமானார்


download

இந்தியாவின் தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி  தனது 95 ஆவது வயதில் இன்று (07) மாலை 6.10 மணிக்கு சென்னையில் காலமாகியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 11 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றியே அவர் உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேல்- அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக ஜூன் 3 ஆம் திகதி 1924 ஆம் ஆண்டு பிறந்த கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.

அவர் தன்னுடைய 14 வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கு பிறகு அரசியலில் ஈடுபட்டார். அதன் பின்னர் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் கருணாநிதி தன் அரசியலில் தீவிரத்தைக் காட்டினார்.

தமிழகத்தில் திராவிடர் இயக்க மாணவர் அணியை முதல் முதலாக தொடங்கியவர் கருணாநிதி ஆவார். தன் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி எனக் கூறப்படுகின்றது.

இவர் கலை மற்றும் இலக்கிய துறைகளில் இடைவிடா எழுத்து பணியை தொடர்ந்தார். அவர் எழுதிய உடன் பிறப்புக்கு கடிதம் என்ற தொடர் உலகின் நீண்ட தொடர்களில் ஒன்றாகும்.

கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை தூத்துமேடை நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா சூட்டினார். அந்த கலைஞர் என்ற பட்டம் இன்று வரை அழைக்கப்படுகிறது. அவருக்கு முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர், தமிழ் இனக் காவலர், கலைஞர் என்று பல பெயர்கள் உள்ளது.

ஆனால், கலைஞர் என்று அழைப்பதையே அவர் மிகவும் விரும்பினார். இதை தோடர்ந்து முரசொலி வெளியீட்டுக் கழகம்’ என்ற பெயரில் 1942 ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, ‘முரசொலி’ என்ற மாத இதழைத் தொடங்கினார்.

அதில் சேரன் என்ற பெயரில் புரட்சியான பல கருத்துகளுடன் கட்டுரைகள் எழுதினார். திரைத்துறை மீதும் தீராத ஆர்வம் இருந்தது. எனவே, திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமி-யோடு பணியாற்ற, பெரியார் அனுமதியுடன் கோவைக்குச் சென்றார் கருணாநிதி. ‘ராஜகுமாரி’ படத்துக்கு வசனம் எழுதினார். அதை தொடர்ந்து பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். கடைசியாக அவர் கதை, வசனம் எழுதிய திரைப்படம் பொன்னர்-சங்கர் மற்றும் தொலைக்காட்சி தொடர் ராமானுஜர் ஆகியவையாகும்.

கருணாநிதி கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையில் ஐந்து முறை முதல்வராக பதவி வகித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>