சவுதியுடனான உறவை சீர்செய்ய உதவுமாறு சவுதி நட்பு நாடுகளுக்கு கனடா அழைப்பு


canada

சவுதியுடன் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாதானமான முறையில் தீர்த்துக் கொள்வதற்கு சவுதியின் நட்பு நாடான ஐக்கிய அரபு இராஜ்ஜியம், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடொ தயாராகி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

சவுதி மற்றும் கனடா ஆகிய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் முழுமையாக தடைப்பட்டுள்ளது. சவுதியிலுள்ள கனடா தூதுவரை வெளியேற்றியுள்ளதுடன், கனடாவிலுள்ள தனது தூதுவரை சவுதி மீளவும் அழைத்துக் கொண்டுள்ளது.

கனடா வெளிவிவகார அமைச்சும், கனடா தூதுவரும் விடுத்த அறிவிப்பே சவுதியின் தீர்மானத்துக்கு காரணமாகியது. சவுதிஅரேபியா மனித உரிமைகளை மீறிச் செயற்படுவதாகவும் மனித நேய செயற்பாட்டாளர்களை கைது செய்து வருவதாகவும் கனடா, சவுதியைக் குற்றம்சாட்டியிருந்தது.

தனது உள்நாட்டு விவகாரங்களில் கை வைப்பதாக சவுதி, கனடா மீது குற்றம்சாட்டியது. இதனையடுத்து, கனடாவுடன் இருந்த சகல உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளது.  (மு)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>