இஸ்ரேல் தாக்குதலில் 2 பலஸ்தீனர்கள் பலி


palastin

இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் காசாவில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்த பகுதியில் ஆட்சியில் உள்ள பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டிருக்கும் 23 வயது கொண்ட அஹமது முர்ஜான் மற்றும் அப்தல் ஹாபிஸ் அல் சிலாவி இருவரும் தமது உறுப்பினர்கள் என்று ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படை உறுதி செய்துள்ளது.

 

காசாவில் கடந்த மார்ச் இறுதியில் தனது பூர்வீக பூமிக்கு திரும்பும் உரிமையைக் கோரி பலஸ்தீனர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேல் தாக்குதல்களில் குறைந்தது 160 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>