அரச ஊடகங்கள் அடுத்தவர்கள் மீது சேறு பூசுவதை நிறுத்த வேண்டும்- மஹிந்த


mahindha rajapaksha

மக்களின் வரியில் செயற்படும் அரச ஊடகங்கள் மற்றவர் மீது சேறு பூசும் விதத்தில் செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அபே கம வளாகத்தில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

சுயாதீனத் தொலைக்காட்சி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பன அரச நிறுவனங்கள் ஆகும். இது நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்துக்கு வால் பிடித்து, மற்றவர்கள் மீது பொய்யான செய்திகளை ஒளிபரப்பி வருவதை அனுமதிக்க முடியாது.

தனியார் ஊடகமொன்றில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதாயின், அதனை எதிர்க்க முடியாது. ஆனால், நாட்டின் வரிப் பணத்தில் இயங்கும் ஒரு ஊடகம் இவ்வாறு செயற்பட முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  (மு)

14 comments

  1. ஊடகச்சுகந்திரம்அன்று.கொழையாக.மாறிவிட்டது.இன்று.அதுகிடையாது.உண்மையைசொல்ல.யாரும்பயப்படுவனல்ல

  2. எல்லாம் உன்னிடமிருந்து கற்றுக் கொண்டவைதான்.

  3. எல்லாம் உன்னிடமிருந்து கற்றுக் கொண்டவைதான்.

  4. இது ஒரு சேநாயின் நல்லாச்சீ அல்ல பல சேநாய்களின் நல்லாச்சீ

  5. Engee yarum serum poosala cement m.poosala.ni moodikituu eruuu

  6. Engee yarum serum poosala cement m.poosala.ni moodikituu eruuu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>