தெற்காசியாவின் ஹஜ் விவகார சபைக்கும், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திற்கும் இடையில் சந்திப்பு


Haj 2018 03.jpg

தெற்காசியாவின் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் சபைக்கும், இலங்கை முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இரவு சவூதி அரேபியாவில் நடைபெற்றது.

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் அமைந்துள்ள தெற்காசியாவின் ஹஜ் விவகார காரியாலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தெற்காசியாவின் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளில் ஒருவரான உஸ்தாத் உமர் சிராஜ் உமர் அக்பர் மற்றும் இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உதவிப் பொதுச் செயலாளரும், இலங்கை ஹஜ் குழு உறுப்பினருமான மௌலவி எம்.எஸ்.எம். தாஸீம், மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் டாக்டர் அஷ்ரப் நூமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகளை மேலும் சிறந்த முறையில் முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், இலங்கை ஹஜ் யாத்திரியர்களின் நலன்களில் பூரண ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை இம்முறை ஹஜ் ஏற்பாடுகளைச் சிறந்த முறையில் முன்னெடுக்க
ஒத்துழைப்பு வழங்கியமைக்காக சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான், ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மேலும் தெற்காசியாவின் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான சபைக்கும் இலங்கை தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.

– மக்காவிலிருந்து அலுவலக ஊடகவியலாளர் ஸப்ரான் எம் மன்சூர் –

Haj 2018 01.jpg

Haj 2018 02.jpg

Haj 2018 03.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>