எதிர்க்கட்சி தலைவர் பதவி – சபாநாயகரின் நிலைப்பாடு பாராளுமன்றத்தில் அறிவிப்பு


parliamnet opposition leader

அரசியல் அமைப்பு அல்லது பாரம்பரிய நடைமுறைக்கு அமைவாக எதிர்க்கட்சி தலைவராக வேறொரு நபரை நியமிக்க முடியாது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பிரித்தானிய பாரம்பரிய அல்லது உலகில் ஏனைய சம்பிரதாயத்திற்கமைவாக இதனை செய்யமுடியாதென்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற விவாதத்திற்கு நேர ஒதுக்கீடு செய்யும் பொழுதும் பாராளுமன்ற தெரிவிக்குழு சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்கட்சிக்கு தற்பொழுது வழங்கப்படும் நேர ஒதுக்கீடு மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி சமீபத்தில் சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>