தேசிய அடையாள அட்டைக்கு புதிய கட்டணம்


nic sri lanka

தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பொழுது அறவிடும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆட்பதிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

அதன்படி, மூன்று ரூபாவாக இருந்த தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் பொழுது அறவிடப்படும் கட்டணம் நூறு ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, 15 ரூபவாக இருந்த தேசிய அடையாள அட்டையில் திருத்தத்தை மேற்கொள்ளும் போது அறவிடப்படும் கட்டணம் 250 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.

மேலும், 15 ரூபவாக இருந்த மீண்டும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் போது அறவிடப்படும் கட்டணம் 500 ரூபவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த புதிய கட்டணம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, புதிய கட்டண முறை செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த கட்டணம் இறுதியாக 1980ம் ஆண்டில் திருத்தப்பட்டதாக ஆட்பதிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>