பூஜாபிட்டிய பிரதேச சபை உப தலைவருக்கு பாராட்டு


A.L.M. Razan

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பூஜாபிட்டிய பிரதேச சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.ரசான் பூஜாபிட்டிய பிரதேச சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டதை முன்னிட்டும் அவரினால் பிரதேசத்திற்கு செய்யப்பட்ட சேவைகளை பாராட்டும் முகமாகவும் பூஜாபிட்டிய, படகொள்ளாதெனிய இளைஞர் முன்னணியினால் நூல் வெளியீடும் மற்றும் கெளரவிப்பு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக “படகொள்ளாதெனிய இளைஞர் முன்னணியின்” தலைவர் எம்.ஐ.எம்.மிப்ராஸ் தெரிவித்தார்.

இந்த கௌரவிப்பு வைபவம் இம்மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணிக்கு கல்ஹின்னை மும்தாஜ் மஹால் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக மத்திய மாகாண சபையின் உறுப்பினர் திலக் ராஜபக்ச, பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர பெர்னாந்து, அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஐ.எம். இஸ்திஹார் உட்பட பிரதேசத்தின் கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், வாலிப முன்னணியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இவ்விழாவில் பிரதேச வாசிகள், நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர். (நு)

– ராபி சிஹாப்தீன் –
IMG_20180810_120048

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>