
முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்ட திருத்த ஐக்கிய கூட்டணி நடாத்திய முஸ்லிம் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு கடந்த புதன்கிழமை (08) கொழும்பு அல்ஹிதாயா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் முஸ்லிம் விவாக விவாக ரத்து திருத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வின் வரவேற்புரையையும் ஆரம்ப தெளிவுரையையும் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தின் உப தலைவர் அஷ்-ஷைக் இர்பான் நிகழ்த்தினார்.
அவர் தனதுரையில் நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் குழுவினரால் வழங்கப்பட்டுள்ள முதல் பரிந்துரையில் காணப்படும் மார்க்க வரையறைகளுக்கு அப்பாற்பட்ட பிரதானமான பத்து விடயங்களுக்கான தெளிவுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இந்நாட்டில் உள்ள 217 அரபு கலாபீடங்களையூம் உள்ளடக்கி செயற்பட்டு வரும் இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியம் நீதியமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பாக தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை அவ்வொன்றியத்தின் தலைவர் அஷ்-ஷைக் ஹாஷிம் ஷூரி அவர்கள் முன் வைத்தார்கள்.
அதன் போது அவர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் குழுவினரின் அறிக்கை காலத்திற்கு தேவையான மாற்றங்களையும், இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்துள்ள உரிமைகளையும் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மார்க்க வரம்புகளுக்கு உற்பட்ட நடைமுறை சாத்தியமான ஒரு அறிக்கையாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் அறிக்கைக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தாபா அவர்களின் குழுவினரின் அறிக்கைக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகள் பற்றிய தெளிவை இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் அஷ்-ஷைக் முர்ஷித் முன்வைத்தார்.
அதன் போது முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்டத்தில் இருந்து மத்கப் என்ற வாசகம் நீக்கப்படுவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றி தெளிவுபடுத்தியதுடன் குறிப்பாக முஸ்லிம் விவாக விவாக ரத்து ஆலோசனைக் குழுவில் பெண்களின் அங்கத்துவம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும், மதா கொடுப்பனவு, நிகாஹின் போது மணப் பெண்ணின் கையொப்பம் பெறப்படல் போன்றவற்றை விளக்கினார்.
தொடர்ந்தும் வலி இல்லாமல் திருமணம் செய்வதை அனுமதிப்பதனால் ஏற்படும் மோசமான பாரதூரங்கள் பற்றியும் அது எவ்விதமாக முஸ்லிம் சமூகத்தில் கலாச்சார சீர்கேடுகளை உண்டு பன்னும் என்பதையும் தெளிவுவூ படுத்தினார். மேலும் பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுபடியற்றது என்று முன்னாள் நீதியரசர் குழுவினர் பரிந்துரைத்திருப்பது எவ்வாறு இஸ்லாமிய போதனைகளுக்கு முரண்படுகின்றது எனபதையூம் சுட்டிக் காட்டினார்.
தனது உரையில் இறுதியம்சமாக காழி நீதிமன்றங்களுக்குச் சட்டத்தரணிகள் வந்து வாதிடுவதனால் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் பற்றியூம்இ பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதனால் சமூகத்தில் ஏற்படும் மோசமான விளைவுகள் சம்பந்தமாகவும் தெளிவு படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பாக முன்னாள் காழிநீதிபதிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டை கம்பஹா மாவட்ட முன்னாள் காழி அஷ்-ஷைக் லாபிர் முன்வைத்தார். அவர் தனதுரையில் காழிமார்களின் முன்னிலையில் தலாக் கூறாவிடின் தலாக் நிகழாது என்றும், 16 வயதை அடைய முன் திருமணம் செய்தால் அது செல்லுபடியாகாது என்றும், பதிவு செய்யாத திருமணங்கள் செல்லுபடியற்றது என்றும் சில ஷரீஆவிற்கு முரணான காலத்திற்கு பொருத்தமற்ற மும்மொழிவூகளை நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் அறிக்கையில் காணப்படுவதகவூம் குறிப்பிட்ட அவர் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் குழுவினரின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஏற்று சட்டமாக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து உளவியலாளர் சகோதரி ஹஜரா ஸதாம் உளவியல் துறையில் தனது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, வழங்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பான தனது கருத்துக்களை முன்வைத்தார். தனதுரையில் வலி இல்லாமல் திருமணம் செய்வது பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும், பெண்கள் திருமண வயதை 18 ஆக உயர்த்துவதில் பல சமூக சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தனது உளவியல் துறை அனுபவத்தில் 16-18 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர்களுக்கிடையே பல தீய தொடர்புகள் ஏற்பட்டு அதன் காரணமாக அவர்களின் வாழ்வு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கையில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை கொடுத்து அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து தென்னிலங்கை V Foundation அமைப்பின் மகளிர் பிரிவு இவ்விரண்டு அறிக்கைகள் தொடர்பாக தாம் கொண்டுள்ள நிலைப்பாடு பற்றிய தெளிவை சோகதரி தேசமானி முஹம்மத் ஜஃபர் பாதிமா பர்ஹானா முன்வைத்தார். தனதறிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கை பெண்களுக்கு போதிய உரிமைகளை மார்க்க வரையறைகளுக்கு உற்பட்டவாறு வழங்கியுள்ளதுடன், நிர்வாக விடயங்களில் தேவையான மாற்றங்களையும் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டதுடன் பெண்கள் அமைப்பு என்ற வகையில் நாம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் அறிக்கையை நாம் ஆதரிப்பதாகவும் தெளிவு படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மஸ்ஜித்கள் சம்மேளனங்களின் நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கான நேரம் வழங்கப்பட்டது. அதன் போது கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனம் சார்பாக அதன் தலைவர் அல்ஹாஜ் அஸ்லம், கண்டி மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், மத்திய மாகாண முஸ்லிம் லீக், கடுகஸ்தோட்டை இஸ்லாமிய சேமநல சங்கம் ஆகியவற்றின் சார்பாக கண்டி மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் சித்தீக் தமது நிலைப்பாடுகளை முன் வைத்தனர்.
இருவரின் நிலைப்பாடும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கையே சட்டமாக்கப்பட வேண்டும் என்பதாகக் காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ராபிதது அஹ்லிஸ் ஸஷுன்னா அமைப்பின் நிலைப்பாட்டினை அதன் நிறைவேற்று அலுவலர் அஷ்-ஷைக் இத்ரீஸ் ஹஸன் முன்வைத்தார். அவர் தனதுரையில் இவ்வறிக்கைகளில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கை மார்க்க வரையறைகளுக்கு உற்பட்ட வகையில் இருப்பதாகவும், தேவையான நிருவாக ரீதியான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து ராபிதது அஹ்லிஸ் ஸஷுன்னா அமைப்பின் பிரதித் தலைவர் கலாநிதி அஷ்-ஷைக் முபாரக் மதனி அவர்களின் உரை இடம் பெற்றது. இவ்வூரை மிகவும் சுருக்கமானதாகவும், மிகத் தெளிவான விளக்கங்களை உள்ளடக்கியதாகவும் காணப்பட்டது. மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன, அது எவ்வாறான வரையறைகளுக்கு உற்பட்டு இருக்க வேண்டும், மகாஸிதுஷ் ஷரீஆவின் அடிப்படைகளான உயிர் பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, அறிவு பாதுகாப்பு, பரம்பரை பாதுகாப்பு, மார்க்க பாதுகாப்பு போன்ற ஐந்தில் நீதியரசர் ஸலீம் மர்சூப் அவர்களின் அறிக்கை பரம்பரை பாதுகாப்பு எனும் விடயத்தில் தவறிலைத்துள்ளதாகவூம் குறிப்பிட்டார். (நு)
Lafees Shaheed