தனியார் பஸ் வேலைநிறுத்தம் இல்லை


vs-news.s3.us-east-2.amazonaws.comwww.newsfirst.lkbus-strik-0282d56c3f473263a108f78c35bf9a8f0f4aea9d

அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் இன்று (12) நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளை முன்வைத்து அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதனால் இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எற்றவாறு பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் விலைச் சூத்திரம், பஸ் போக்குவரத்துக்காக வழங்கப்படுகின்ற கேள்விப்பத்திர முறையில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பஸ் தொழிற்துறை எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகள் சம்பந்தமாக போக்குவரத்து பிரதியமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் மக்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>