லண்டன் முனவ்வர் எழுதிய ‘விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி’ – நூல் வெளியீட்டு விழா (PHOTOS)


4

லண்டன் வாழ் இலங்கைப் பிரஜையான ஹமீத் முனவ்வர் எழுதிய ‘விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி’ எனும் நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (11) கொழும்பு – 10, மாளிகாகந்தையிலுள்ள ஜம்மியத்துஷ் – ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கலந்துகொண்டார்.

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி முபாறக், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் மற்றும் சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிகேவா மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், நூலாசிரியரின் உறவினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர், எழுத்தாளர் ஹமீட் முனவ்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் வரவேற்புரையை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும், முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் சாதிக் சிஹான் நன்றியுரையையும் நிகழ்த்தினர். (நு)

– எம்.எஸ்.எம்.ஸாகிர் –

4

5

6

7

1

2

3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>