புத்தரை நிந்திக்கும் நூல்: உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விஜேதாச IGP இற்கு கடிதம்


Wijedasaaa

புத்த பெருமானையும் பௌத்த மதத்தையும் நிந்திக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ள “புதுன்கே ரஸ்தியாது” எனும் நூல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (20) பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நூல் புத்தபெருமான் தொடர்பில் மிகவும் இழிவான முறையில் கருத்துக்களை முன்வைத்துள்ளது. இதனால், இலங்கையிலுள்ள பௌத்தர்கள் மட்டுமல்லாது, சர்வதேச ரீதியிலுள்ள பௌத்தர்களும் பெரும் மன வேதனை கொண்டுள்ளனர்.

இதனால், இந்த நூலின் ஆசிரியர், இதனை வெளியிட்டவர், விநியோகிப்பவர் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடாத்தி வழக்குத் தொடர வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் அக்கடிதத்தில் அமைச்சர் பொலிஸ்  மா அதிபரைக் கேட்டுள்ளார்.  (மு)

39611441_255784645259078_1822347502637023232_n

 

 

2 comments

  1. Buddha never ever voilation but who pray Buddha they are voilation Buddha never teach voilation so created by human voilation attitude rascals

  2. What is the real history of srilangka ???? Why the srilangka government’s distroyed the real history of ceylon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>