அடுத்த அரசாங்கத்திலாவது விளையாட்டுத் துறை அமைச்சு கிடைத்தால் செய்வேன்- அர்ஜுன


Arjuna-Ranatunga-640x400

அடுத்த ஒரு அரசாங்கம் அமையும் போதாவது தனக்கு விளையாட்டுத் துறை அமைச்சை வழங்குமாக இருந்தால் இத்துறையில் காணப்படும் மோசடிகளை இல்லாமல் செய்து சரியான பாதையில் இட்டுச் செல்ல தயாராக இருப்பதாக அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா பிரதேசத்தில் இன்று(25) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

தன்னை விட விளையாட்டுத் துறை அமைச்சை கோருவதற்கு யாருக்கும் தகுதியில்லையென்றே நான் கருதுகின்றேன். தற்போதைய அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு என்னைவிடவும் விளையாட்டுத் துறையும் தெரியும். சட்டமும் தெரியும் என்பதனால் நான் மௌனமாக இருக்கின்றேன்.

விளைாயட்டுத் துறையில் இடம்பெறும் சீர்கேடுகளுக்கு காரணமான உயர் அதிகாரிகள் அமைச்சர்களின் பாதுகாப்பில் உள்ளதனால் அவற்றைச் சீர் செய்ய முடியாமல் உள்ளது.

அரசாங்கத்துக்குள் முரண்பட்டுக் கொண்டு செயற்பட முடியாது என்பதனால் பேசாமல் இருக்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறினார்.  (மு)

One comment

  1. He asking only cricket committee not spots minister ok

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>