யாழ் முஸ்லிம்களின் உணவுப்பாரம்பரியம் நிகழ்வு


40114717_936455429882623_7493816246085877760_n

யாழ் மாவட்ட முஸ்லிம்களின் உணவுப்பாரம்பரிய நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்றது.

யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட 2018ம் ஆண்டுக்கான யாழ் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 24,25,26 ஆகிய திகதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

குறித்த ஒன்றுகூடல் நிகழ்வின் இறுதி நாளாகிய ஞாயிறன்று யாழ் முஸ்லிம்களின் உணவுப்பாரம்பரியம் என்னும் தொனிப்பொருளுடன் பகல் போசனமாக பனை ஓலையால் பின்னப்பட்ட (கிடுகு சோறு) வழங்கப்பட்டது.

வட மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு அதிகமான யாழ் முஸ்லிம், தமிழ் மக்கள் உட்பட யாழ் மாவட்டத்தைப் பூர்வீகமாகவும் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வசிக்கும் முஸ்லிம்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

30 வருடகால யுத்தத்துக்கு பின்னர் யாழ் முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்டு நடாத்தப்பட்ட முதலாவது நிகழ்வு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.(ச)

 

40082354_936455503215949_7636763314726371328_n

40114717_936455429882623_7493816246085877760_n

40081955_936455393215960_2861772997503483904_n

40073977_936455609882605_6743392164195074048_n

One comment

  1. கிடுகு சோறு அல்லது நெய்ச்சோறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>