கையடக்கத் தொலைபேசியில் காணொளி தயாரிப்பு – கொழும்பில் பயிற்சிப்பட்டரை


FB_IMG_1534869243516

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) மாவட்ட ரீதியாக இலவசமாக ஏற்பாடு செய்யும் கையடக்க தொலைபேசியில் காணொளி தயாரிப்பு மற்றும் சமூக ஊடகம் தொடர்பான பயிற்சிப்பட்டரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் (04.09.2018) திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 2.00 மணி முதல் 5.00 மணி வரை கொழும்பில் நடைபெறவுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் மொஹம்மத் அஸ்வர் தெரிவித்தார்

இப்பயிற்சிப்பட்டரையில் சமூகம் ஊடகம், கையடக்க தொலைபேசியில் கானொலி தயாரித்தல், அவற்றிலுள்ள புதிய நுட்பங்கள், அவற்றுடனான தொழில்நுட்ப வளர்ச்சி, அதன் இலங்கையில் பயன்பாடு, காணொளி எடுத்தல் தொடர்பான களப்பயிற்சி உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாக காணப்படும்.

இப்பயிற்சிப்பட்டரை தொடர்பான மேலதிக விபரங்களை இல. 3/8, ஸ்வர்னா பிளேஸ், நாவல, ராஜகிரிய எனும் முகவரியில் அல்லது 077-1254636 எனும் தொலைபேசி இலக்கத்துடன் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் பாடநெறி ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

– ராபி சிஹாப்தீன் –
FB_IMG_1534869243516

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>