வெலம்பொடையில் போதைப் பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம் (PHOTOS)


IMG-20180831-WA0026

கண்டி – வெலம்பொட அல்ஹிதாயா ஜும்மா பள்ளி மற்றும் “கயிட் வெலம்பொட அமைப்பு ” ,, (Guide Velamboda) உள்ளிட்ட 14 சமூக நல அமைப்புக்கள் இணைந்து கடந்த31 ஆம் (31.08.2018) திகதி வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் ஏழாம் திகதி வரை பிரதேசத்தில் “போதைப்பொருளை ஒழிப்புபோம், போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம்” எனும் தலைப்பில் போதைப் பொருள் ஒழிப்பு வாரமொன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெலம்பொட அல்ஹிதாயா ஜும்ஆ பள்ளியில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவினை அடுத்து போதை பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது.

தொடந்து ஒரு வாரம் நடைபெறவுள்ள இத்திட்டத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தி அதனை ஒழித்தல் தொடர்பில் துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்தும் நடைபெறும்.

இக்காலப்பகுதியில் முதியோர், பெற்றோர்கள், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், மாணவர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன் மார்க்க உரைகள், வீதி நாடகம், மேடை நாடகம், வீதி ஊர்வலம், கையெழுத்து வேட்டை, துண்டுப்பிரசுரம், விழிப்புணர்வு காட்சிப்படுத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் இப்போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தில் பிரதேசத்திலுள்ள அனைவரும் கலந்து கொண்டு போதை பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கும் இச்செயற்திட்டத்தினை வெற்றி பெற செய்வதற்கும் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகப் பள்ளி நிர்வாக சபை செயலாளர் எம்.எல்.ரி. லெப்பே தெரிவிக்கின்றார். (நு)

– ராபி சிஹாப்தீன் –
IMG_20180901_091329

IMG_20180901_091249

IMG-20180831-WA0026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>