திகன வன்முறையின் போது நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்குப் பாடுபட்டவர்களுக்கு கௌரவிப்பு (PHOTOS)


WhatsApp Image 2018-09-05 at 7.52.03 AM (1)

கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் (05.03.2018) திகதி இடம்பெற்ற திகன வன்முறைச் சம்பவத்தின்போது பிரதேசத்தில் அமைதி, சமாதானம், நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்குப் பாடுபட்டவர்களை கௌரவிப்பதற்கு குண்டசாலை பிரதேச செயலகம் கௌரவிப்பு விழாவொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இவ்வைபவம் நேற்று முன்தினம் 3 ஆம் திகதி திங்கள் கிழமை (03.09.2018) குண்டசாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பலரினதும் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.பி.ஹிட்டிசேகர, குண்டசாலை பிரதேச செயலாளர் சமந்தி டி நாகஹதென்ன, உதவி பிரதேச செயலாளர் கெளசல்யா எஸ் தர்மபால ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிவில் சமுக அங்கத்தினர்கள், மதத் தலைவர்கள், பொலிஸ், இராணுவம், சிவில் பாதுகாப்பு படை, கிராம சேவையாளர், பிரதேச செயலக பதவி நிலை அதிகாரிகள் மற்றும் கீழ் நிலை அதிகாரிகள், உள்ளிட்ட பல தரப்பினருக்கும் பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது மெனிக்ஹின்ன ஜும்ஆ பள்ளி தலைவர் அப்துல் ரவ்ப் மற்றும் மௌலவி எஸ்.எம்.பசால், மெளலவி எம்.என்.எம்.பிர்தவ்ஸ், எம்.ஏ.அஹமட் சிப்லி, எம்.எம்.எம்.ரசீன், கெ.எஸ்.பி.எம்.எம்.நிஜாம், ஏ.எச்.எம்.சாலி, ஏ.ஆர்.எம்.ஜவ்பர், எம்.என்.உம்மு சாஹிரா, எம்.எம்.இசாக் ஆகியோர் உள்ளடங்கலாக மொத்தம் 65 பேர்கள் ஞாபக சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

– ராபி சிஹாப்தீன் –

WhatsApp Image 2018-09-05 at 7.52.05 AM

WhatsApp Image 2018-09-05 at 7.51.51 AM

WhatsApp Image 2018-09-05 at 7.51.53 AM

WhatsApp Image 2018-09-05 at 7.51.54 AM

WhatsApp Image 2018-09-05 at 7.51.54 AM (1)

WhatsApp Image 2018-09-05 at 7.51.55 AM

WhatsApp Image 2018-09-05 at 7.51.56 AM

WhatsApp Image 2018-09-05 at 7.51.57 AM

WhatsApp Image 2018-09-05 at 7.51.57 AM (1)

WhatsApp Image 2018-09-05 at 7.51.58 AM

WhatsApp Image 2018-09-05 at 7.51.59 AM

WhatsApp Image 2018-09-05 at 7.52.00 AM

WhatsApp Image 2018-09-05 at 7.52.00 AM (1)

WhatsApp Image 2018-09-05 at 7.52.02 AM

WhatsApp Image 2018-09-05 at 7.52.03 AMd9913a48-971f-4cc4-9141-d078fed759e1

WhatsApp Image 2018-09-05 at 7.52.04 AM

WhatsApp Image 2018-09-05 at 7.52.03 AM (1)

One comment

  1. எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் புரிந்தும் இந்த ஏமாந்த கூட்டம் திரும்ப திரும்ப ஏமாறுகிறார்கள்
    பெளத்த இனவெறிக்கு ஆளானவர்களுக்கு முதலில் நஷ்டஈடு கொடுங்கைய்யா
    இந்த ஞாபக சின்னம் தானே இந்த கெட்ட உலமக்குகளை சொர்க்கத்துக்கு கொண்டு செல்லப் போகுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>