மஹிந்த குழுவின் அத்தனை சவாலும் தோல்வி- சாகல ரத்னாயக்க


Sagala Ratnayake

கூட்டு எதிர்க் கட்சி எட்டுத் தடவைகள் ஆட்சியை கவிழ்க்கும் முன்னெடுப்புகளை மேற்கொண்டதாகவும், இருப்பினும்,  ஜனாதிபதி,பிரதமர் இணைந்த அரசாங்கத்தை இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லையெனவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அடுத்து கிருலப்பனை பின்னர் கண்டி, காலிமுகத்திடல் எனப் பல இடங்களில் கூட்டம் நடத்தினார்கள். இச் சந்தர்ப்பங்களில் அரசைக் கவிழ்க்கப் போவதாகவே சவால் விட்டார்கள்.

ஒன்றிணைந்த எதிரணியினதும் பொது ஜன பெரமுனவினதும் ஆர்ப்பாட்டம் படுதோல்விய டைந்துள்ளது. முன்னர் முழு கொழும்பையும் சுற்றிவளைக்க திட்டமிட்டார்கள். பின்னர் அந்த முடிவை கைவிட்டு இரவு வரை எதிர்ப்பு நடத்த தீர்மானித்ததாக ஊடகங்கள் கூறின.

எனினும் நள்ளிரவாக முன்னரே போராட்டம் நிறைவடைந்துள்ளது. இந்தப் பின்னடைவு கடந்த காலத்தில் பெற்ற பாரிய தோல்வியாக மாறியுள்ளது.

இந்த நிலையில் தான் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் நடந்த மோசடிகள் தொடர்பில் தாமதித்தாவது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் நிறைவு செய்யப்படும். இதன் பெறுபேறு எல்லோரையும்விட ராஜபக்‌ஷாக்களுக்கு நன்கு தெரியும். இந்த நிலையில் தான் மக்கள் எழுச்சி பேரணி நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>