ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான சதியே 20 ஆவது திருத்தச் சட்ட மூலம்- கம்மம்பில


Udaya-Gammanpila

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான ஒப்பந்தமொன்றை அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கியுள்ளதாகவும் அதனையே 20 ஆவது திருத்தச் சட்ட மூலமாக பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ளதாகவும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று (07)  மனுவொன்றைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

எல்லைநிர்ணய அறிக்கையை காரணம் காட்டி மாகாண சபைத் தேர்தலை தள்ளிப்போட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலை அவ்வாறு ஒத்திப் போட எந்தவிதமான நியாயங்களும் கிடையாது. ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடாத்தியே ஆகவேண்டும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கே 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஜே.வி.பி. ஊடாக கொண்டு வர வைத்து அரசாங்கம் சதி செய்கின்றது.  இந்த திருத்தச் சட்ட மூலத்துக்கு பொதுஜன அபிப்பிராயத்தை வினவ வேண்டிய தேவைப்பாடு கிடையாது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக 6 வாக்குகளே உள்ளன. இதனைத் தோற்கடிக்க 75 வாக்குகள் இருந்தால் போதுமானது.

எம்மிடம் 70 வாக்குகள் உள்ளன. இன்னும் 5 வாக்குகளே தேவையாகவுள்ளன. அதனை தேடிக் கொள்வது அவ்வளவு சிரமமான காரியமல்ல. இது இவ்வாறிருக்கும் போது மக்களின் அபிப்பிராயத்தைக் கோரி காலத்தை இழுத்தடித்து, ஜனாதிபதித் தேர்தலையும் ஒத்திவைக்கவே அரசாங்கம் ஜே.வி.பி. ஊடாக சதி செய்கின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.  (மு)

One comment

  1. 2030வரையும்ஜனாதிபதீ.தேர்தல்நக்காது.திருட்டுகூட்டத்தை.அழிக்கும்வரை.அடே.தம்பம்டிகாடிகா.கழியாட்டத்தில்எத்தனைபேரைகொண்டாய்.அவுஸ்ரேலியாலஞ்சம்வாங்கினநாய்கூட்டம்.கொழும்பை.முட்டுகைஇடௌடு.உனக்கு.லாபம்கிடைத்தது.சாராயபோத்தலும்பிரயாணியும்.பாலும்கிடைத்ததாஅடே.உன்னுடைய.கொட்யில்வரக்கூடிய.பாலைக்குடி.அராங்குட்டி.கலநாய்தம்டம்டிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>