சுவீடன் தேர்தலில் பிரதான இரு கட்சிகளுக்கும் சம அளவான வெற்றி


images

சுவீடன் நாட்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட  இரு பிரதான கட்சிகளும் சம அளவான வாக்குகளை வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் சகல  வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் ஆளும் மைய இடதுசாரி கூட்டணி தனது எதிர் கட்சியான மைய வலதுசாரி கூட்டணியை விடவும் குறுகிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றபோதும் இரு தரப்பும் சுமார் 40 வீத வாக்குகளை வென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தேசியவாத சுவீடன் ஜனநாயகவாதிகள் கட்சி கடந்த தேர்தலில் 12.9 வீத வாக்குகளை வென்ற நிலையில் இம்முறை 18 வீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இரு பிரதான கட்சிகளும் தேசியவாத கட்சியுடன் கூட்டணி சேர்வதை நிராகரித்திருக்கும் நிலையில் ஏனைய அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி ஒன்றுக்காக பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளன.
சுவீடன் (Sweden) ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும். பின்லாந்தும் நோர்வேயும் இதன் அண்டை நாடுகள். பரப்பளவின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய நாடு சுவீடன் ஆகும். இந்நாடு 21 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.    (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>