சூடான் அமைச்சரவையை குறைக்க ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை


125px-Flag_of_Sudan.svg

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதற்காக சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

இதற்காக வேண்டி அமைச்சரவையையும் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்களின் எண்ணிக்கை 31 இல் இருந்து 21 ஆக குறைக்கப்படும் என்று ஜனாதிபதி ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“நாடு முகம்கொடுத்திருக்கும் பொருளாதார நிலைமையை சரிசெய்வதற்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர் என்று அனைத்து தரப்புகளிலும் காணப்படும் அரசாங்கத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் அறிவித்துள்ளார்” என்று வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சூடானில் பணவீக்கம் 65 வீதத்திற்கு மேல் உயர்ந்திருப்பதோடு உணவு மற்றும் ஏனைய பொருட்களின் விலை கடந்த ஆண்டை விடவும் இரட்டிப்பாகியுள்ளது.

எனினும் 2011 ஆம் ஆண்டு தென் சூடான் தனி நாடாக பிரிந்து சென்றதை அடுத்து சூடானுக்கு கால் பங்கு எண்ணெய் வருவாய் பறிபோன நிலையில் அந்த நாடு தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சூடான் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும்.   இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாக இருந்தது.

எனினும், 2011 இல் பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தென் சூடான் பகுதி தனி சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இந்நிலை மாற்றமடைந்தது.  இது தற்போது அல்ஜீரியா மற்றும் கங்கோ குடியரசுக்கு அடுத்தபடியாக ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குவதாக கூறப்படுகின்றது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>