காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் : ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு


Michelle-Bachelet

அரசாங்கத்தினால் காணாமற்போனவர்கள் தொடர்பான அலுவலகம் (Office on Missing Persons) அமைக்கப்பட்டுள்ளதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலட் (Michelle Bachelet) பாராட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UN Human Rights Council) 39ஆவது அமர்வில் உரையாற்றும்போது அவர் இலங்கை தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

நல்லிணக்க பொறிமுறையை ஏற்படுத்தும் விடயத்தில் அதிகாரிகளின் செயற்பாடு ஓரளவு மெதுவாக இடம்பெற்ற போதிலும் ஏனைய செயற்பாடுகள் (Consultation Process) மற்றும் நிறுவனத்தின் ஏனைய நடவடிக்கைகள் (Institutional Capacity Building) பாராட்டுக்குரியவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமற்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதிலளிப்பதற்காக இந்த அலுவலகம் செயற்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முழுமையான அலுவலகம் (Office on Reparations) ஒன்றை நிறுவுவதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல் (Accountability), உண்மையைக் கண்டறிதல் (Truth Seeking) என்பனவற்றுக்கான வேலைத்திட்டங்களில் முன்னேற்றம் காண வேண்டியமை, நாட்டின் ஸ்திரத்தன்மை என்பன இந்த விடயத்தில் முக்கியமான விடயங்களாகும் என்றும் மிச்செல் பச்சிலட் மேலும் குறிப்பிட்டுள்ளார். (நு)

– DGI –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>