சகோதரர் ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்- இந்தியாவில் மஹிந்த கருத்து


mahind

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எனது சகோதரன் ஒருவர் போட்டியிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  மஹிந்த ராஜபக்ஷ “த ஹிந்து” பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகராக வருபவர் தங்களது குடும்பத்தவர் ஒருவரா? அல்லது வேறு ஒருவரைப் பற்றி கருத்தில் கொள்வீர்களா? என த ஹிந்து பத்திரிகை ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

எனது மகன் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது. ஜனாதிபதி வேட்பாளராக வரும் ஒருவர் இலங்கை சட்டப்படி 35 வயதை அடைந்திருத்தல் வேண்டும். கடந்த காலங்களில் இந்த வயதெல்லை 30 ஆகவே காணப்பட்டது. இதனால், அவருக்கு 2019 இல் வேட்பாளராக வர முடியாது.

ஆனால், எனது சகோதரர் ஒருவர் சந்தேகமின்றி போட்டியிடுவார். இருப்பினும், மக்கள் தேவையை அடிப்படையாக வைத்து யார் என்பதை கட்சியும், கூட்டணியும் தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.   (மு)

One comment

  1. Multi race country mind ir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>