விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாட்டம்


Photo (5)

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன. காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று விநாயகப் பெருமானை வழிபாட்டுச் செல்கின்றனர். பல இடங்களில் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அங்கும் ஏராளமான பக்தர்கள் விநாயகருக்குப் பூஜை செய்து வழிபட்டுச் செல்கின்றனர்.

அந்தவகையில், மலையகத்தில் முக்கிய இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியுள்ளது. கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் பிரதம குரு ஸ்ரீ.ஸ்கந்தராஜா தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், வேண்டுதலையும் நிறைவேற்றினர். (கி|ஸ)

Photo (3) Photo (4) Photo (5) Photo (9)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>