மஹிந்தவின் குடும்பவாத கருத்து, இன்னுமொரு மைத்திரியை உருவாக்கும்- குமார வெல்கம


kumara welgama

கட்சி என்பது யாருக்கும் பொதுவானது எனவும், குடும்பத்துக்கு மாத்திரம் அதனை வரையறுத்துக் கொள்ளும் நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் மஹிந்த ஆதரவுக் குழு பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

குடும்ப வாதம் நாட்டுக்குப் பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எனது சகோதரன் ஒருவர் போட்டியிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக தெரிவித்திருந்தார்.

இந்த குடும்ப வாதத்தினாலேயே கடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி தோல்வியடைந்தார். கடந்த அரசாங்கத்தில் குடும்ப அங்கத்தவர்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. இதற்கு அப்போதைய அனைத்து அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நேராக அரசியல் செய்தவர்களும் திரைமறைவில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர்.  கட்சியில் சிரேஷ்டமானவர்கள் பலர் உள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ சில விடயங்களை மறந்து விடக் கூடாது. ஜே.ஆர். ஜெயவர்தனவின் விருப்பத்துடன் பிரேமதாச  அதிகாரத்தைப் பெறவில்லை. சந்திரிகாவின் விருப்பத்துடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரம் கிடைக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவும் தனக்குரிய இடம் வழங்கப்பட வில்லையென்பதனாலேயே சென்றார்.

இந்த நிலைமைகளை மறந்து, படிப்பினை பெறாமல் செயற்பட்டால், இன்னுமொரு சிறிசேனவை உருவாக்கவா இந்த முயற்சி எனவும் குமார வெல்கம மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

 

 

2 comments

  1. வெல்கம்பள.நீஙேகள்.மைத்திரியோடே.சேரும்

  2. Mohamed Meera Mohamed Meera

    Sethaanda segaru

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>