இறப்பர் ​தொழிற்சாலையில் வாயு கசிவு – ஐவர் பாதிப்பு


Screen Shot 2018-09-14 at 10.56.45 AM

ஹொர​ணை, வகவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் ​தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட அமோனிய வாயு கசிவினால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில், எரிவாயு சிலின்டர்களை லொறியிலிருந்து இறக்கியபோது அதிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில், இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக, ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>