எரிபொருள் சூத்திரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை- ஜனாதிபதி


president maithripala sirisena georgia1

எரிபொருள் விலையைத் தீர்மானிப்பதற்கு விலைச் சூத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், அது அமுலுக்கு வந்த நாள் முதலே எரிபொருள் விலை அதிகரித்துச் செல்வதே இடம்பெற்று வருவதாகவும் விலைக் குறைவை ஏற்படுத்த வில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இன்று (14) காலை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலைச் சூத்திரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துடன் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உலக சந்தையில் இடம்பெறும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப உள்ளுர் சந்தையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே விலைச் சூத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், விலை அதிகரிப்பு மாத்திரமே அதனூடாக இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தனக்கு அது தொடர்பில் உடன்பாடு இல்லாதுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.  (மு)

 

 

 

 

10 comments

  1. அப்போது.நீங்கள்.சொல்லிஇருந்தால்.சரி.எரிபொருள்.மாதத்துக்கு.மாதம்.விலைஅதிகரிக்கிறது..இது.என்ன.அணியம்.ஒரு.விலைவைத்தால்..அந்த.விலைகௌகு.விற்காவேண்டும்.இது.அரசாங்கம்.மகௌகளுக்குசெய்யுயேய்துரோகம்

    • நீங்கள் எழுதுற வசனங்கள் சொற்கள் ஒன்றும் சரியா விளங்குவதில்லை முதலில் சரியா வாக்கியமாக எழுத பழகுங்கள். எல்லா சொற்கலுக்கு பிறகு முற்று புள்ளியை வைக்கிறீர்கள் அது பிழை ஒழுங்காக எழுத பழகுங்கள் இல்லாட்டி எழுத வேண்டாம்!!

  2. Irfan Thaseem Irfanthaseem
  3. சரி ஜனாதிபதி, அப்போ இந்த நாட்டை யார் ஆள்கிறார்கள்?

  4. 😂😂😂😂

  5. யோ நீ நாட்டுகே வேஸ்டு
    சனிய சகட

  6. எரிபொருள் விலை உயர்வுக்கும் நாட்டு ஜனாதிபதிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றால் நாட்டில் நடக்கும் நல்லது கெட்டது எதுக்கும் ஜனாதிபதி பொறுப்பில்லையா?……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>