என்னை கொலை செய்ய சதி : குற்றச்சாட்டு குறித்த விசாரணை CID யிற்கு – ஜனாதிபதி


image_e986c9a5be

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா தன்னையும், கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (14) காலை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான விசாரணையை பொலிஸ் விசாரணைப் பிரிவு தற்பொழுது ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன் அறிக்கை கிடைத்தவுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும்  கூறியுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார கண்டி பிரதேசத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததுடன், இதுதொடர்பான ஒலிப்பதிவுகளையும் வௌியிட்டிருந்தார்.

கிழக்கில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை வேறு பக்கம் திருப்பிவிடலாம் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கூறியதாக ஊழல் எதிர்ப்பு படையணியின்  நாமல் குமார கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>