மக்கா – மதீனா இடையே ரயில் சேவை, 24 ஆம் திகதி ஆரம்பம்- சவுதி அரசாங்கம்


train

புனித மக்கா மற்றும் மதீனா ஆகிய நகர்களை இணைக்கும் அதிவேக ரயில் சேவை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக சவுதி ரயில்வே அமைச்சு அறிவித்துள்ளது.

ஜேடா மற்றும் ரபீ ஆகிய நகர்கள் ஊடாக இந்த ரயில் பயணிக்கவுள்ளது. மதீனாவுக்கும் ரபீ ரயில்வே நிலையத்துக்கும் இடையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் பரீட்சார்த்த ரயில் சேவைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் பயணிப்பவர்கள் இணையத்தளம் ஊடாகவும் ஆசனப் பதிவுகளை செய்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு நிறைவடையும் வரையில் ஒரு நாளைக்கு 8 தடவைகளும், தேவையைப் பொருத்து இந்த ரயில் பயணங்களின் தடவைகளை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் நபீல் அல் அமூதி தெரிவித்துள்ளார்.  (மு)

 

 

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>