சீனாவின் கென்டென் நோக்கிய விமானம் 11 மணி நேரம் தாமதம்


srilankanairlines1

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனாவின் கென்டென் நகர் நோக்கி இன்று (16) பயணிக்க இருந்த யு.எல். 880 எனும் இலக்கத்தையுடைய விமானம்  11 மணிநேரம் தாமதித்துப் பயணிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூறாவளி நிலமை காரணமாக குவங்ஜூ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் இதனாலேயே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் குறித்த விமானம் நாளை (17) அதிகாலை 1.30 மணிக்கு குவங்ஜூ நோக்கி பயணிக்க இருப்பதாகவும் குவங்ஜூ விமான நிலைய காலநிலைக்கு ஏற்ப மேலும் தாமதம் ஏற்படலாம் எனவும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

கென்டென் என்பது சீனாவின் ஐந்து தேசிய மைய நகரங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  (மு)

One comment

  1. Allah yar yarayum aapaththil irunda paathu kakkanum aamin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>