பௌத்த மதத்தை சிதைக்கும் பின்னணியில் மகா சங்கத்தினர் – மல்வத்து பீட போசகர்


1537101601-threro_T

பௌத்த மதத்தை சிதைக்கும் நடவடிக்கைகளின் பின்னால் மகாசங்கத்தினர் இருப்பதாக மல்வத்து பீட போசகர் திம்புல் கும்புரே ஸ்ரீ சரணங்கர தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று (16) ஒத்தபத்தவ ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

புத்த பெருமான் பிறந்தது இலங்கையில் எனவும், புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்தது இலங்கையில் எனவும் தெரிவிப்பவர்கள் உருவாகியுள்ளனர். இது போன்று இன்னும் பல விடயங்களையும் அவர்கள் கூறிவருகின்றனர். இவ்வாறு பௌத்த மதத்தை சிதைப்பது பொது மக்கள் அல்லவெனவும் பௌத்த பிக்குகளே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதத்தை இவ்வாறு கண்ணெதிரே மாற்றியமைக்க முயற்சிப்பதற்கு பிரதான காரணம் வயிற்றுப் பிழைப்பே எனவும் குறிப்பிட்டுள்ள தேரர், மல்வத்து பீட மகாநாயக்க தேரர் ஒருவர் இதன் பின்னால் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் மௌனம் சாதிப்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் மல்வத்து பீட போசகர் திம்புல் கும்புரே ஸ்ரீ சரணங்கர தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>